13.2.12

ஏழிலைப் பாலைப் பூக்களாய்.

முதுவேனில் காலம்

எற்பாடும் மாலையும் முத்தமிட்டுக் கொண்டிருந்தது
காற்றைப் போல அலைந்து கொண்டிருந்தது மனம்
நெடுநேரமாய் மரத்தினடியில் காத்துக் கொண்டிருந்தான்
அற்றை நாள் அம்மரம் பூத்திருக்கவில்லை.

பின்பனிக் காலம் 

கடுங் குளிர் யாமத்தைத் தழுவிக் கிடந்தது
அம்மரம் மிகுந்த வாசனையோடு பூத்திருந்தது  
அவளோடு பேசிக் கொண்டே இருந்தது காற்று
ஏழிலைப் பண்கள் இசை மறந்து அசைந்தன

உதிர்ந்து கிடக்கின்றன காற்றின் சொற்கள்
ஏழிலைப் பாலைப் பூக்களாய்.

இளவேனில் வரும்.

1 comment:

நந்தினி மருதம் said...

கவிதை அற்புதம் வாழ்த்துக்கள்