24.2.12

பெருங்காட்டுப் பெருமழை.

சிறு செடியாட தரு மகிழ்ந்தாட
ஓடை எழுந்தாட அருவி குதித்தாட  
இளஞ் சூரல் தவழ்ந்தாட
இசை வேரல் அசைந்தாட
துள்ளி மானாட கரடி கூத்தாட
பிளிறிப் பிடியாட களிறு சேர்ந்தாட
உறுமிப் புலியாட ஊளையிட்டு நரியாட
கீரிக் கிளர்ந்தாட சட்டையுரித்துப் பாம்பாட
தாவிக் குரங்காட சிறுத்தை சிலிர்த்தாட
இடி மறைந்தாட மின்னல் நெளிந்தாட
வனமெங்கும் மேகம் சுழன்றாட
குளிர் காற்றின் இடையணைத்து
ஆடிப் பெய்தது பெருங்காட்டுப் பெருமழை.

No comments: