24.5.12

கொப்பளிக்கும் காமத்தின் நிறம் அந்தி.

ஊஞ்சலாடி உலவி உள்ளமெங்கும்
பூச் சூடும்  ஒளிர்மஞ்சள் மையலில்
தகித்து மோகித்து உயிர் கொல்லும்
செக்கச் சிவக்கும் செந்தூர மோகத்தில்
கரு மேக மழையாகத் தேன் பொழிந்து
செவ்விதழ்கள் முத்தமிட்டு முயங்க
விரல் கோத்து தழல் நீலம் மெய்யணைத்து
பெருங்களிப்பில் சுழன்றாடித் தழுவ
பொல்லா ஆசை புயலாக உருவெடுத்து
வெண் சுடராய் கண்களிலே மிளிர
ஊனுருக்கும் பசலை பொன்னிறமாய் 
கொப்பளிக்க அந்தி நிறத்தில் பேரண்ட
வெளியெங்கும் சிதறியது காமம்.

No comments: