முன் பின் பார்த்திராத
பெயர் தெரியாத
பறவையின் சிறகொன்று
தரையில் கிடந்தது.
நீல மைக் குழம்பில்
அம் மென்சிறகின்
நுனி முக்கி
அந்தப் பறவையை
சொற்களால்
வரையத் தொடங்கினேன்.
வண்ணச் சிறகுகளும்
குறு குறு கண்களும்
கூர் மூக்கும்
சின்னஞ் சிறு வாயுமாய்
வடிவாய் இருக்கிறது
அப்பறவை.
பறக்க விட
உயிர்ச் சொல் வேணும்.
பெயர் தெரியாத
பறவையின் சிறகொன்று
தரையில் கிடந்தது.
நீல மைக் குழம்பில்
அம் மென்சிறகின்
நுனி முக்கி
அந்தப் பறவையை
சொற்களால்
வரையத் தொடங்கினேன்.
வண்ணச் சிறகுகளும்
குறு குறு கண்களும்
கூர் மூக்கும்
சின்னஞ் சிறு வாயுமாய்
வடிவாய் இருக்கிறது
அப்பறவை.
பறக்க விட
உயிர்ச் சொல் வேணும்.
No comments:
Post a Comment