மழை மாந்தி குறுஞ்செடிகள் மகிழ்ந்தாடும்
முகிலோடு மலைச் சிகரம் மூக்குரசும்
சாதாரிப் பண் பாடி நீரோடை நெளிந்தோடும்
சில்லிளங்காற்றோடு சிறு பூக்கள் கதை பேசும்
இருங்களி அப்பி களிறெல்லாம் விளையாடும்
கரு மந்தி கிளை தாவிப் பழம் பிளந்து தின்னும்
கட மான்கள் தேடி வரிப் புலிகள் உலவும்
தேன் குடித்து வண்டெல்லாம் திசை மறக்கும்
தென்கடல் கடந்த பறவையொன்று வனஞ் சுற்றும்.
3 comments:
அத்தனையும் அழகு..இப'படி ஒரு முறை பறவையாய் இருந்துவிட மனம் ஏங்குகிறது.வாழ்த்துக்கள் சொந்தமே
அருமை சொந்ததமே..மனம் ஏங்குகிறது ஒருமுறை இப்படி பிறக்க..!
படித்து பரவசப்பட்ேடேன்
Post a Comment