23.6.12

யாமத்தைச் சலனப்படுத்திய இரவுப் பறவை.

பூக்களை உதிர்த்து வெம்மை சூடி
மௌனித்திருந்தது சித்திரை இரவு
அலைகளற்ற வானக் கருங்கடலில்
நகர்ந்து கொண்டிருந்தது பிறை ஓடம்
பழுத்த இலையும் துளிர்த்த இலையும்
காற்றைத் தழுவி உதிரவும் உயிர்க்கவும்
பெருந்தியானத்தில் ஆழ்ந்திருந்தன.
விரியனிடமிருந்து தப்பித்த மண்டூகம்
நீலாம்பல் குளத்துக்குள் தாவிக் குதித்தது
வெளியெங்கும் பறந்து திரிந்த இரவுப் பறவை
யாமத்தைச் சலனப்படுத்தி கிளையமர
மெல்ல வீசத் தொடங்கியது மழைக் காற்று.

No comments: