11.8.12

மழைப் பொழி கூத்து.

களிறுலவுங் காட்டில்
வெயில் குளித்த
சருகெல்லாம் வீணையாகும்.
அதிரும் பேரிசையில்
பெருந்தருவின் கிளையெங்கும்
செந்தளிர்கள் துளிர்க்கும்.
மழைப் பொழி கூத்தில்
ஓடை காட்டாறாய்ச் சீறும்.
அருவி பெருக்கெடுத்துப்
பெரும் பேச்சு பேசும்.
தீந்திரவம் குடித்துக்
கிறங்கிச் சுரும்பு
புதுப் பண்கள் பாடும்.
காற்றின் தீராத தாளத்தில்
பச்சிலைகள் சிலிர்க்க
மென்பூக்கள் பூக்கும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... அருமை...

வாழ்த்துக்கள்... நன்றி...