23.8.08

ஒரு மாய நொடியில்...

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை...

வைகறை வானத்தின் வண்ணத் தீற்றல்களின் வழியாக சூரியன் உதிக்கத் தொடங்கிய நேரம்... மொட்டுக்களாய் இருந்த பூக்கள் கதிர்கள் வழியாக வானத்தின் வண்ணங்களை வகை வகையான பூக்களில் தீட்டின... வண்ண வண்ணப் பூக்கள் பூக்கத் தொடங்கிய அந்த காலை நேரத்தில் தென்றல் தவழ்ந்து வர வண்ணத்துப் பூச்சிகள் தன் வண்ணச் சிறகு விரித்து மலர்ந்த மலரினில் தேன் குடித்தன... சில்லென்ற காற்று வீசத் தொடங்கிய பொழுது இலைகளுக்கெல்லாம் சிறகு முளைத்தன... விடியலின் அழகில் பூமி சொக்கி நிற்க எங்கிருந்தோ வந்தன மழை மேகங்கள்... கருத்த மேகங்கள் வெளிச்சத்தை ஒரு மாய நொடியில் மின்னலாய் மாற்றியது...

சட்டென்று இடி இடிக்க பூக்கள் அதிர்ந்த அந்தப் பொழுதில் மழை பெய்யத் தொடங்கியது...

இன்னும் பெய்து கொண்டிருக்கிறது மழை... 

No comments: