10.8.08

பூஞ்சிரிப்பு...

வசந்த காலத்தின் ஒரு மாலைப் பொழுதில்
என் மேசை நாட்காட்டியில்
சிரித்துக் கொண்டிருந்த குழந்தைகளின்
சிரிப்பைக் கேட்டு அடம் பிடித்தன
தோட்டத்தில் இருந்த பசுஞ்செடிகள்...
அடம் பிடிக்கும் செடிகளுக்கு நீரூற்றத் தொடங்கிய
சில நாட்களுக்குப் பின் வந்த
ஒரு காலை நேரத்தில்
செடியெங்கும் பூத்துக்கிடந்தன
குழந்தைகளின் சிரிப்பு...

No comments: