10.11.09

பெருமழை நிறைத்து...

சரக்கொன்றை பூத்து
வாசல் நிறைந்திருந்த
ஒரு மாலை வேளையில்
கிணற்றின் மேல் கம்பியில்
டிங் டங் டிங் என மெல்லிசையை
வாசித்துக்கொண்டு இருந்தன
கரிச்சான் குருவிகள்...
தோட்டத்தில் பூத்திருந்த பாரிஜாதம்
நொடிக்கொரு
தரம்
திரும்பி
பார்த்துக் கொண்டே இருந்தது...
காற்றுடன் பேசிக்கொண்டே இருந்தன
தென்னை மரத்தின் கீற்றுகள்...
ரசித்துக் கொண்டிருக்கிறது மேகம்
பெருமழை நிறைத்து...

2 comments:

நதியானவள் said...

ரசித்தேன்...:)

Senthu VJ said...

நனைந்து கொண்டே ரசித்தேன்.