9.3.10

மூங்கில்கள் பூத்த யானைகள் காடு...

குறிஞ்சிப் பூவில் தேனெடுத்து
குலையாய் வாழ்ந்திடும் தேன் வண்டு...

கிளைகள் தோறும் குந்திக் குந்தி
பல() மரங்கள் தாவிடும் கருமந்தி...

முட்களை உதிர்த்திடும் முள்ளம் பன்றி
சிறு கிழங்குகள் தோண்டி விளையாடும் பன்றி...

விரிந்த வானம் பறந்திட இருந்தும்
வந்திடும் புள்ளினம் களித்திடும் தினமும்...

உதிர்ந்திடும் இலைகள் பூக்கள் சருகுகளாகி
மக்கிடும் மண்ணில் புழுவும் பூச்சியும் பற்பல உண்டு!

இத்தனை நிறமா பச்சையில் என்று
இலைகள் உண்டு வனப்பேச்சி வீட்டில்...

மஞ்சு தவழ்ந்து வரும் கொண்டல்கள் கூடி வரும்
பொழிந்திடும் மாமழையும் மண்ணோடு மெய்கலக்கும்...

ஊற்றெடுக்கும் சுனை நீர் ஓடையாகி ஓடிவரும்
ஓடிவரும் ஓடையெல்லாம் நதியாகப் பிறப்பெடுக்கும்...

பிறப்பெடுக்கும் நதியெல்லாம்
தவழ்ந்து எழும் அருவியாக...

தவழ்ந்து எழும் அருவியெல்லாம்
ஆறாகப் பெருக்கெடுக்கும்...

பெருக்கெடுக்கும் ஆற்றினிலே
வாய் பிளக்கும் முதலைகளும்
துள்ளி விளையாடும் மீன்களும்
நீந்திவரும் அழகாக...

ஓடிடும் அணிலும் ஆடிடும் மயிலும்
பாடிடும் குயிலும் வாழ்ந்திடும் நாடு
கீரியும் பாம்பும் கிளர்ந்தெழும் காடு...

வண்ணப் பூக்கள் பூத்திடும் காடு
கொடிகள் செடிகள் நிறைந்திட்ட காடு

உறுமும் வேங்கைகள் உலவும் காடு
மருளும் மான்களின் அழகிய வீடு

நயந்திடும் நரிகள் திரிந்திடும் காடு
ஒளிந்திடும் முயல்களின் உல்லாசக் கூடு

இது உயிர்கள் வாழ்ந்திடும்
மூங்கில்கள் பூத்த
யானைகள் காடு...

காடுகளை அழிக்காதீர்...

1 comment:

karpagam said...

Really amazing......Every words says tones of meanings......
"IYARKAIYAI KAPPOM, IYARKAYAI IRUPPOM"