14.3.10

முத்து மழை பெய்த பொழுது...

கருக்கிருட்டில்
தளும்பி நின்றது
பச்சைக் குளம்...

நிலவின் ஒளியில்
குளித்த கல்லொன்று
எறிந்தேன்...

வளையங்கள் தோன்ற
முத்து மழை பெய்தது...

எறிந்த கல்
பூத்து ஒளிர்ந்தது
அல்லியாய்...

No comments: