7.7.10

பொன்னந்தியில் பெய்த மழை...

அழகாய் தத்தித் தத்தி தாயின் விரல் பிடித்து
ஒயிலாய் நடந்து வரும் சிறு குழந்தையாய்
வான வெளியில் நடந்து வந்தன மேகங்கள்
உள்ளம் மகிழச் செய்த குளிர் மழைக் காற்றில்
பூக்களும் இலைகளும் பொழியத் தொடங்கின
பசுந் தங்க நிறத்திலடித்த வெயில் மறைந்து
பொன்னந்தி வரைந்த வண்ணத் தீற்றல்கள்
பரிதியின் பிரிவில் கடும் பசலை கண்டு கறுத்து
நிலமெங்கும் பரவி திசை மறைத்து நிற்க
திகைத்த கொண்டல்கள் அதிர்ந்து இடியென
இடிக்க வெளிச்ச மின்னல் கோல் ஊன்றி
மரங்களின் வேர் மகிழப் பெய்தது மழை...

No comments: