5.7.10

மழைப் பரல் முல்லை

தளிர் இலைகள்
சிறகசைத்த
இளங் கொடியில்
வான் மகளின்
மேகச் சிலம்புகள்
கழன்று விழ
மழைப் பரல்கள்
முல்லைப் பூவாய்
தெறித்துப் பூத்தன.

1 comment:

கீதா இளங்கோவன் said...

மழை நேர மாலையில் உங்கள் கவிதை முல்லையின் மணத்தை போல மனதை ஈர்க்கிறது சரவணன்