14.6.10

களி பொங்கிய பெருமழைப் பொழுதில்...

நீலக் கம்பளம் விரித்த வானெங்கும்
கூர்வேல் கொண்ட புரவிப் படையென
விரைகின்றன அழகிய வெண்மேகங்கள்
களம் ஆடும் மற வீரர்கள் வாள் வீசி
கடுஞ் சமர் புரியும் பெரும் ஓசையொத்து
கருமேக யானைகள் சூழ்ந்த பொழுதில்
அண்ட வெளியெங்கும் பிளிறின இடிகள்
தந்த மின்னல் ஒளிரப் பெய்த பெருமழையில்
காற்றோடு களி பொங்கப் பெருங்கூத்தாடுகின்றன
மரங்களும் புத்திலைகளும் நறுமலர் பூக்களும்...

1 comment:

Unknown said...

hi saravana nice poem, not only for this all of your poems..