31.8.10

முகில் குடை

வெயில் சந்தனம் பூசியிருந்த அழகான மாலைப் பொழுதில்
ஒளிச் சுனையில் ஊற்றெடுத்தன வானமெங்கும் வண்ண நதிகள்
பச்சைப் பீலிகளின் குழு நடனத்தில் லயித்திருந்தது மரகதப் புறா
மென் காற்றின் நீரலைக் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தது
தடாகத்தில் மலர்ந்திருந்த வெண் அல்லியும் நீலத் தாமரையும்
வேர்பிடித்திருந்த பதியனிட்ட செடியில் இலையொன்று துளிர்த்திருந்தது
ஊசித் தட்டான்களோடும் பட்டாம் பூச்சிகளோடும் மகிழ்ந்து குலாவி
முகில் குடை பிடித்து வந்து கொண்டிருந்தது குளிர் மழைக்காற்று.

No comments: