13.9.10

மேகம் மழைத் தூரிகை பிடித்து வரைந்த ஓவியத்தில் நான் நனைந்து கொண்டிருந்தேன்.

பச்சை இலைகளிலும்
வண்ணப் பூக்களிலும்
வெளிச்சம் பூத்திருந்தன
ஈரம் பொழிந்த நிலமெங்கும்
தவழ்ந்து கிடந்த
பிச்சிக் கொடிகளில்
மலர்ந்து கொண்டிருந்தது
நெகிழும் பேரன்பு.
பெருகிச் சுழித்தோடிய
மழையாற்றில்
பொன் சருகுத் தோணிகள்
பயணம் தொடங்கின.
கூட்டுக்குள்ளிருந்து
இலைச் சாளரம் வழியே
அழகிய உலகத்தை
இமை மூடாமல்
பார்த்துக் கொண்டிருந்தது
ஊதாத் தேன் சிட்டு
மேகம் மழைத் தூரிகை பிடித்து
வரைந்த ஓவியத்தில்
நான்
நனைந்து கொண்டிருந்தேன்.

No comments: