26.9.10

பூம்பாதிரித் தாழ்வாரத்தில்...

அந்திக் கடலில்
கருமுகிலைத்
தழுவிக் கிடந்தது
ஒளிச்செம்பரிதி
நெடிதுயர்ந்த பூம்பாதிரி
மர வீட்டின் தாழ்வாரத்தில்
உலாத்திக் கொண்டே
ஏதேதோ பேசிச் சிரித்தன
கொஞ்சும் மைனாக்கள்
பழுத்து உதிர்ந்த
பொன்மஞ்சள் இலையைத்
துரத்திக் கொண்டிருந்தது
பருவக்காற்று
செவ்விதழ் அசைத்து
நாணம் கொண்டது
பாதிரிப் பூ
மேகப் புற்றிலிருந்து
பறக்கத் தொடங்கின
மழை ஈசல்கள்.

No comments: