3.10.10

உதிரும் மழைப் பூக்களும் பூக்கும் மந்தாரைகளும்

பன்னீர் பூங்கள்ளைக்
குடித்திருந்த காற்றின்
மோகத் தழுவலில்
மயங்கிக் கிடந்தது
பூத்திருந்த நிலம்
பரந்த வெளியெங்கும்
பொன் மெழுகி
கத்தாளம் பூவிலமர்ந்தது
தங்கத் தும்பி
சிறகு விரித்து
வானம் பறந்தன
வண்ணக் கொண்டை
கொண்டலாத்திகள்
மேகச் செடியில்
பூத்திருந்த மழைப்பூக்கள்
உதிரத் தொடங்கின
பூத்தன மந்தாரைகள்.

No comments: