10.2.11

காதல் அலைகள்.

அந்திப் பொழுதில்
ஆழியின் வதனத்தில்
ஆதவன் முத்தம்.
முகிழ்த்த காதலில்
தகித்த மோகத்தில்
சுடர்ப் பொன்னொளி
மின்னித் தழுவ
பெருங்கடலெங்கும்
காதல் அலைகள் .

No comments: