6.1.11

பிரியங்களைத் தொலைத்த மொழிகளின் யாத்திரையின் போது...

பெருந்துயர் சேர்ந்து
மனத்துள் நுழைந்து
மென்று தின்று
அகத்துயிர் குடித்து
அனுதினமும் கொன்று
வலிகளை மட்டுமே
பழக்கமாக்கி
கண்ணீரோடும்
மௌனங்களோடும்
பிரிவின் பொழுதுகளில்
யாத்திரை போகிறது
பிரியங்களைத்
தொலைத்த மொழிகள்.
வினையின் செயலென்று
அழவும் மறந்து
வேதனையின் விதையொன்றை
ஊன்றிக் கொண்டிருக்கிறேன்.

No comments: