23.11.10

காதலில் பெருகும் காமம்

கோலக் குறுஞ்சிரிப்பும்
கூர்வேல் விழி மொழியும்
ஒயில் மயில் நடையும்
மோனச் சிறுமுகமும்
செந்தூர ஒளி நுதலும்
கார்முகில் கருங்குழலும்
வெண் எயிறும் -தமிழ்
விளம்பும் செவ்விதழும்
அசையும் பொன் தனமும்
மலர்க் கொடியிடையும்
காணும் மகிழ் நெஞ்சில்
பெருங்காமம் பூத்தபடி
காதல் பெருகுதடி.

No comments: