30.7.08

சொல்வாயா?

மழையில் நனைந்து
வெடவெடத்துப்போய்-தன்
சிறகுகளை அடித்து
வெப்பம் தேடும்
அந்தச் சிறுகுருவிக்காக
எனக்குப் பிடித்த
மழையை
பெய்தது போதும் என்று
சொல்வாயா?

No comments: