8.8.08

காதல்...சில குறிப்புகள்...சில நினைவுகள்...

விழி பேசும்

மௌன மொழி - வெளிப்படுமே

இதயம் வழி...

வாடிய மலரெனினும்-நீ

சூடிய மலரிது...

யாருக்கும் புரியாத

என் கவிதை

உனக்குப் புரிந்தது.

உனக்குப் புரிந்ததால்

அனைவர்க்கும் புரிந்தது.

புரிந்தது

என் கவிதையல்ல!

நம் கவிதை...

மழை வாசம்

மண்ணோடு -என்

வாசம் உன்னோடு...

காத்திருத்தல் சுகம்

யாருமற்ற தனிமையில்

உனக்கான காத்திருப்பு

மிக சுகம்...

உன்னுடனான நினைவுகள் தான் எத்தனை அழகானது... உன் விரல் கோர்த்து மழையில் நனைந்த நாட்களும் ...என் தோள் சாய்ந்து சாயங்காலப் பொழுதுகளில் எனக்கு மட்டுமே கேட்கும் படியாக நீ பாடிய பாட்டுக்களும்...நம்மை கடந்து போகும் ஒவ்வொரு குழந்தையையும் தூக்கி கொஞ்சி முத்தமிட்டு என்னை காதலுடன் பார்க்கும் அந்த விழி நொடிகளும்...உனக்கு நான் எழுதிய கடிதங்களை என் மடியில் படுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் வாசித்து ஒவ்வொரு வரியிலும் உன்னைப்பற்றி நான் எழுதியவைகளை சுட்டி "நிசமாவே என்னை பத்திதான் எழுதி இருக்கியா என " குழந்தையைப் போல கேள்வி கேட்கும் அந்த குறுஞ்சிரிப்பு நிமிடங்களும்...மணிக்கணக்கில் நமை மறந்து பேசிக் கொண்டிருந்த நிலாக் காலங்களும்...கனவில் நான் வந்ததை கதை போலச் சொல்லி என்னை இறுக கட்டிக் கொண்ட அந்த முதல் ஸ்பரிசமும் என நினைவுகளை மட்டுமே என்னிடம் விட்டு விட்டு எங்கேயடி போனாய் கள்ளி?

நினைவுகள் அழகெனினும்....

No comments: