19.8.08

மழை தேவதை...


பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று...

அதுவும் ரயில் பயணம், ஜன்னல் ஓரம் என்றால் கேட்கவே வேண்டாம் மகிழ்ச்சிக்கு... 

பயணத்தில் மழை என்றால் என் உற்சாகத்திற்கு எல்லையே கிடையாது...

அப்படித்தான் அன்றும் என் பயணத்தில் மழை பெய்தது... 

ஜன்னலுக்கு வெளியே கைகளை நீட்டி மழையில் விளையாடிக் கொண்டிருந்தேன்...

மழை எழுப்புவது மண் வாசம் மட்டுமல்ல மன வாசத்தையும் கூட...

என்னைப் போலவே ஒரு பெண்ணும் தன் கைகளை நீட்டி மழையோடு மழையானாள்...

அவள் கை வளைகளின் சிணுங்கல்களை ரசிக்க எங்கிருந்து தான் வந்ததோ இடியும் மின்னலும்...

கரு மேகம் போன்ற அவள் கூந்தலின் ஒரு கற்றை முடி நெற்றியில் படர, விழுந்தது மழையருவி அவள் தாமரைக் கன்னங்களில்...

தேங்கிய மழை நீரில் விளையாடிக் கொண்டிருந்தன அவளின் மீன் கண்கள்...

பறவைகளின் சிறகுகளைப் போல தன் கைகளை அசைத்து ஒரு "மழை" தேவதையாய் காட்சியளித்தாள்...

நானும் நனைவதைப் பார்த்து மழை நனைத்த பூவிதழாள் புன்னகைத்தாள்...

ரயிலிலும் பயணம் செய்கிறார்கள் தேவதைகள்...

-சரவணன்

No comments: