10.9.08

இன்னும் பெய்து கொண்டிருக்கிறது மழை...

மேகங்கள் கூடி

உன்னை வரையத் தொடங்கிய

ஒரு பொழுதில்

பெய்யத் தொடங்கியது மழை...

செடிகள் புதிதாய் பச்சை வண்ணம்

எடுத்து பூசிக்கொண்டன...

பூக்கள் பூக்கத் தொடங்கின...

செம்பருத்தியும் இன்ன பிற பூக்களும்

சிவப்பு நீலம் மஞ்சள் ஊதா வெள்ளை என

வண்ணங்களை எடுத்து அப்பிக் கொண்டன...

அன்பின் ஊற்றில் மனிதர்கள் தோன்ற

மகிழ்ச்சி பெருகியது...

நீராலான இவ்வுலகம் அழகின் வசமானது...

இன்னும் பெய்து கொண்டிருக்கிறது மழை....


No comments: