4.2.10

மழையின் ராகம்...

கருத்த மேகம்
நிறைந்த வெளியில்
மின்னல் தோன்றிய
ஒரு சிறு பொழுதில்

சிரித்த தாமரை

சிந்திய ஒளியில்
பச்சை இலையில்
தக திமி தாளம்...

தாவிக் குதித்த
தவளையொன்று
மழையின் ராகம்

என்ன வென்று
கெண்டை மீனின்
காதில் கேட்டது...


கெண்டை மீனோ
மழையின் ராகம்
குளமே அறியும்
நீயே கேளேன்
என்றே சொல்லி
துள்ளிக் குதித்து
குளத்தில் மறைந்தது...


மோனத் தவத்தில்
இருக்கும் குளத்திடம்
எப்படி கேட்பது
மழையின் ராகம்?


( மழையின் ராகம் அறிய வேண்டி தாவித்தாவி சத்தமிட்டு இப்பொழுதும் குளத்தைச் சுற்றுகின்றன தவளைகள்)