25.3.10

பெய்யட்டும் பெருமழை...

மிகுந்து நிறைந்திருந்தது வெயில்
மலர்ந்த பூக்கள் வாடிச் சுணங்கின
நர்த்தனம் நிறுத்தின இலைகள்
உயிர்க் காற்றின் வெப்பத்தில்
உறைந்து தளர்ந்து கிடந்த உடலெங்கும்
நடுங்கிப் பயணித்தது செங்குருதி.
நிலமெங்கும்ஊறித் திளைத்துக் களிக்க
நெடும்பயணம் புறப்பட்டன மழை மேகங்கள்
காத்துக் கொண்டிருக்கிறது கண்மலர் பூத்த மனம்
பெய்யட்டும் பெருமழை...

No comments: