20.4.10

வதம் செய்யும் தேவதை...

முகம் மறைத்தன
மருதாணி விரல்கள்
விழிகள் பேசின
காதல் மொழிகள்...

செங்காந்தள் விரல்கள் விரித்து
பூங்கூந்தல் அள்ளி முடிந்து
நுதல் விழிச் செந்தூரம் ஒளிர
பொன் முகம் காட்டினாய்!

யாரடிப் பெண்ணே நீ !

மஞ்சள் குளித்த முகம்
நெஞ்சில் நிறைந்த கணம்
பொன் கழஞ்சுகள் சிதறிய இசையாய்
நீ சிரித்தாய்
இல்லை இல்லை
இசைத்தாய்...

பொழியும் மழையாய்
இதயம் நிறைந்தாய்
கருத்துள் நுழைந்து
காதலாகிப் போனாய்!

நீ
என்
தேவதை...

வதம்
செய்யும்
தேவதை...

No comments: