24.4.10

வனைவோம் புது மனிதனை!

ஒ மனிதா!

யார் நீ? உனது ஆதி எது அந்தம் எது?
பிஞ்சாய் இருக்கும் போதே நஞ்சை அறுத்த பின்பும்
பிண்டம் பெரியதானதும் நஞ்சாய் ஆவதேனோ!

நீரில் பிறந்து நெருப்பில் அழிகிறாய்!
அண்டத்தில் இந்தப் பிண்டத்தால் எத்தனை மாற்றம்!
நீ சதைப் பிண்டமா இல்லை அணுக் குண்டமா?

விதையாகி விருட்சமாகி பின் மீண்டும் விதையாகி
புரியாத புதிராய் பெருகி நிற்கிறாய்! - நீ
இயற்கையா இல்லை இயற்கையால் விளைந்த செயற்கையா?

ஆடுகிறாயா இல்லை ஆட்டுவிக்கப்படுகிறாயா?
உயிராய் உடலாய் உள்ளிருக்கும் எலும்பாய்
அன்பாய் அறிவாய் ஓங்காரமாய் எங்கும் இருக்கிறாய்!

ஆக்கமும் அழிவும் தொழிலாகிவிட்ட இந்த நேரத்தில்
மனித மூலாதாரத்தைத் தேடுவோம்!

தேடல் தொழிலாகிவிட்டது தேடுவோம் மூலத்தை
மூலம் தெரிந்து வனைவோம் புது மனிதனை!

1 comment:

Ramanathan said...

nalla irukku PG aana paadhikku mela puriyale, (My fault completely.) muzhu thamizhanavum illa muzhusa aangilamum theriyaadha arai vekkattu manithan naan

Ramanathan.K