27.4.10

நொடி மரணம்...

சீழ் பெருக்கி செங்குருதி வழிந்தோடும்
ரணம் அல்ல மரணம்
பிறந்தவரை மறக்கச் செய்து
உயிர்த்தாமரை மடியும்
நொடிக்கணத்தில் பூக்கும் மகா ரணம்.

நொடிக்குள் மென்தசை தளன்று
காற்று பிரிந்து உயிர் வெப்பம் உதறி
காலனின் கலமாய் பிறப்பெடுக்கிறது.

சடலத்தைத் தீ தின்னுமோ
சாம்பலை மண் தின்னுமோ
உயிரை வான் தின்னுமோ!

யார் அறிவார் நொடி மரணம்?

உயிர் உந்த உடல் நடுங்க
நாடியடங்கி மாயம் காட்டும்
மரணம் காண பயணம் தொடர்ந்தேன்!

மன விழிகள் விரிய
உயிர்த் தாமரை ஒளிர
காயத்துள் மாயமாய்
பூத்திருந்தது மரணப்பூ.

மெய் கண்ட மெய் சொல்ல
மாயாற்புதம் மரணம் வெல்லும்
வழியுரைக்க முற்பட்டபோது

நொ..டி..ம...ர...

No comments: