28.4.10

தாண்டவ மழை...

பெருமரங்களின் விரிந்த கிளைகளிலிருந்து
பூத்திருந்த பொன்னிலைகள் உதிரத் தொடங்கின
கிள்ளை நிறம் இழந்து சுட்டெரிக்கும் வெம்மையால்
வண்ணம் மாறிய நிலமெங்கும் சுற்றிச் சுழன்றடித்த
சூறைக்காற்றில் துடி கொண்டது அந்திவானம்
வெளியெங்கும் வெளிச்ச மின்னல்கள் விளக்கேற்ற
கருங்கொண்டலின் காதலில் பிறந்தன இடிகள்
கடற்புறத்தெங்கும் பனை இலைகள் பறையடிக்க
ஒற்றைக் கால் தூக்கி வல்லான் ஆடிய ஊர்த்துவ
தாண்டவமாய் மண் அதிரப்பெய்தது ஆலங்கட்டிமழை

No comments: