22.4.11

நிறுத்தங்களில் சில கவிதைகள்...

செழித்த பசுஞ்செடியில் விரிந்த புது மலர்
பூவாசம் சூழ மெய்யணைக்கும் தென்றல்
அழகு வான் முகிழ்த்த சுடர் பொன் திங்கள்
புத்தொளி புலர்ந்திருக்கும் விடியல் வெளி
கோலக் கடல் எங்கும் எழிற்கோலம் பூண்டு
துள்ளிக் கரை தழுவும் அன்பின் பேரலைகள்
மழையில் உயிர் சிலிர்த்து உடல் நனைந்து
தொடரும் பயணத்தில் உலவும் நெகிழ்மனம்
நிறுத்தங்களில் எழுதிச் செல்கிறது சில கவிதைகளை.

நன்றி : www.poovarashi.com

No comments: