24.4.11

குழந்தைகளே குழந்தைகளே எங்கே போனீர்கள்?

குழந்தைகளே குழந்தைகளே எங்கே போனீர்கள்?
அழகு மரம் பூத்து நிற்கும் வடிவைப் பாருங்கள்
குழந்தைகளே குழந்தைகளே எங்கே போனீர்கள்?
பச்சை இலை பழுத்த இலை நடனம் பாருங்கள்
குழந்தைகளே குழந்தைகளே எங்கே போனீர்கள்?
ஓடியாடி பழம் கொறிக்கும் அணிலைப் பாருங்கள்
குழந்தைகளே குழந்தைகளே எங்கே போனீர்கள்?
குஞ்சுக் காக்கா குயிலாகும் விந்தை பாருங்கள்
குழந்தைகளே குழந்தைகளே எங்கே போனீர்கள்?
மைனாக் கூட்டம் கிளை தாவும் எழிலைப் பாருங்கள்
குழந்தைகளே குழந்தைகளே எங்கே போனீர்கள்?
ஆட்டம் போடும் குருவிகளின் வீட்டைப் பாருங்கள்
குழந்தைகளே குழந்தைகளே எங்கே போனீர்கள்?
பச்சைக் கிளிகள் பேசும் பேச்சை கேட்க வாருங்கள்
குழந்தைகளே குழந்தைகளே எங்கே போனீர்கள்?
உரு மாறி உரு மாறி கதை சொல்லும் மேகம் பாருங்கள்
குழந்தைகளே குழந்தைகளே எங்கே போனீர்கள்?
என் மடியிலமர்ந்து இயற்கைக் காட்சி காணப் பழகுங்கள்
குழந்தைகளே குழந்தைகளே எங்கே போனீர்கள்?
தின்னப் பழம் நிறைய இருக்கு பறித்துத் தின்னுங்கள்
குழந்தைகளே குழந்தைகளே எங்கே போனீர்கள்?
விளையாட நிழல் இருக்கு இங்கே வாருங்கள்.

2 comments:

cloud nine said...

Missing the lovely childhood:(((

irnewshari said...

Simply superb. High time we need to connect children to nature.

Hari