5.5.11

உலகை ஆள வேணும்.

அக்கா அண்ணன் போல அறிவைத் தேடி நீயும்
துள்ளி ஓடும் கன்றாய் தினம் பள்ளி செல்ல வேணும்
கிள்ளை மொழி பேசும் ஆலங்கிளியைப் போல
அன்னை மொழி பேசி எங்கும் பறந்து திரிய வேணும்
ஆடும் அழகு மயிலாய்ப் பாடும் சோலைக் குயிலாய்
ஆட்டம் ஆடிப் பாட்டுப் பாடி கலைகள் வளர்க்க வேணும்
நன்றாய் மென்று தின்று நல்ல உணவை உண்டு
ஒழுங்காய் உடலைப் பேணி நன்றாய் வாழ வேணும்
அம்மா அப்பா சொல்லைத் தட்டாமல் கேட்டு
என்றும் உண்மை பேசி இந்த உலகை ஆள வேணும்.

1 comment:

cloud nine said...

Another good one! Hope you write more like this for the little ones:)))