9.9.11

பிரிவின் இசை

முல்லை முகையவிழ்த்து
மெல்லக் கசிகிறது  இரவு
திறந்த சாளரங்களின் வழியாக
நெகிழ்ந்து தழுவுகிறது
பூக்களின் வாசனைகளைப்
புணர்ந்த  குளிர்  காற்று.
அதிரும் தந்திக் கம்பிகளின்
ஊடாகப் பிரிவின் இசையை
மீட்டியபடி  பெய்கிறது மழை.
பாடத் தொடங்கும் அவனின்
ஆழ்மனக் குளத்திலிருந்து
எழுந்து வருகிறாள் அவள்.

2 comments:

Shakthiprabha said...

வணக்கம் சரவணன். நலமா?
உங்கள் கவிதையின் ரசிகைகளில் நானும் ஒருத்தி. உங்களின் இக்கவிதையும் இன்னும் ஒன்றையும். வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)

கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_24.html

Shakthiprabha said...

வணக்கம் சரவணன். நலமா?
உங்கள் கவிதையின் ரசிகைகளில் நானும் ஒருத்தி.
உங்களின் இக்கவிதையும் இன்னும் ஒன்றையும்.
வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)

கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_24.html