3.6.16

முத்தமிட்டுப் பிரிந்திருந்தால் ...

விரல்களுக்கு 
புவியை விட 
ஈர்ப்பு விசை அதிகம். 
ஆனால் அன்றைக்கு 
புவியீர்ப்பு விசை
மிக அதிகமாயிருந்தது.

வானம் இடிந்து
தகர்ந்து கொண்டிருந்தது.
வெளிச்சம் உடைந்து
மின்னலெனப் பரவி
கண்களைக் குருடாக்கின.
வார்த்தைகளின் அதிர்வுகளை
உள்வாங்கிக் கொண்டே
மழை ஈட்டிகள் மண்ணுக்குள்
இறங்கிக் கொண்டே இருந்தன.

ஒரு வேளை
எதுவும் பேசாமல்
முத்தமிட்டுப் பிரிந்திருந்தால்
இந்நேரம்
ஒரு காதல் கவிதையின்
முதல் வரியினை
எழுதத் தொடங்கி இருப்பேன்.

-சரவணன். 

No comments: